தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வி.சி., ரயில் மறியல்; 22 பேர் கைது

வி.சி., ரயில் மறியல்; 22 பேர் கைது

வி.சி., ரயில் மறியல்; 22 பேர் கைது


ADDED : ஏப் 06, 2025 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வி.சி., கட்சியினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

வக்பு வாரிய சட்ட திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்து, விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில், வி.சி., கட்சி மைய மாவட்ட செயலாளர் நீதி வள்ளல் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை 4:00 மணிக்கு குருவாயூர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் மற்றும் விருத்தாசலம் போலீசார், மறியலில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இச்சம்பவத்தால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us