/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீனஸ் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
/
வீனஸ் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 17, 2025 12:34 AM

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 210 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றனர். மாணவிகள் ஹரிணி, ராஜ்வர்ஷினி 500க்கு 493 மதிப்பெண் பெற்று முதலிடம், பூமித்ரா, காவியதர்ஷினி, பிரசன்ன பிரியா, சாமிநாதன் ஆகிய நான்கு பேரும் 492 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி ஜெயபிரியா 491 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.
450க்கு மேல் 84 மாணவர்களும், 400க்கு மேல் 140 பேர் மதிப்பெண் பெற்றனர். பாட வாரியாக கணிதம்-1, அறிவியல்-11, சமூக அறிவியல்- 27 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் வீனஸ் குமார், முதல்வர் ரூபியால் ராணி பாராட்டி பரிசு வழங்கினர். பள்ளி முதல்வர் நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் பொனிகலா, ஆசிரியர்கள் உடனிருந்தனர்.