ADDED : பிப் 21, 2024 10:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், மலடு நீக்க சிகிச்சை முகாம் நடந்தது.
முகாமிற்கு, ஊராட்சி செயலர் வீரதுரை தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர்கள் விருத்தாசலம் சரவணன், பெண்ணாடம் வேங்கடலட்சுமி, சரண்யா, கால்நடை ஆய்வாளர் பொன்வேலன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை அளித்து, தாது உப்பு கலவை வழங்கினர்.
முகாமில், ஏராளமான கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.