/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் உழவர் சந்தை வெள்ளி விழா கொண்டாட்டம்
/
விருத்தாசலம் உழவர் சந்தை வெள்ளி விழா கொண்டாட்டம்
ADDED : செப் 25, 2025 04:19 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் பாலக்கரையில் கடந்த 1999ம் ஆண்டு உழவர் சந்தை துவங்கி, 25 ஆண்டுகள் நிறைவுற்றது. இதையொட்டி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், உழவர் சந்தை வளாகத்தில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, வேளாண் அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி வேளாண் அலுவலர் சிவக்குமார், தனசேகரன் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, உழவர்சந்தைக்கு வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில், வேளாண் துறை அதிகாரிகள், நகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.