ADDED : ஆக 21, 2025 08:02 AM

மந்தாரக்குப்பம்: நெய்வேலியில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
'ஈஷா கிராமோற்சவம் ' என்ற தலைப்பில் நெய்வேலி மந்தாரக்குப்பம் என்.எல்.சி., உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் ஆண்களுக்கான வாலிபால் போட்டி நடைபெற்றது. வாலிபால் போட்டியில் 51 அணிகள் பங்கேற்றன.
போட்டியில் குறிஞ்சிப்பாடி கே.பி.டி, கிங்ஸ் அணி முதல் பரிசையும், மருவாய் விமல்பிரண்ட்ஸ் அணி இரண்டாம் பரிசையும், கருங்குழி அணி மூன்றாம் பரிசையும், பச்சையாங்குப்பம் கோகுல் பிரண்ட்ஸ் அணி நான்காம் பரிசையும் பெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முறையே 10,000, 7,000, 5,000 மற்றும் 3,000 பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அணிகள் திருச்சியில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றன. இறுதி போட்டி செப்டம்பரில் கோவை ஈஷா மையத்தில் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கடலுார் வாலிபால் கழகம் மற்றும் ஈஷா யோகா மைய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்