/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்காளர் விண்ணப்ப படிவ பணிகள் தீவிரம்
/
வாக்காளர் விண்ணப்ப படிவ பணிகள் தீவிரம்
ADDED : நவ 24, 2025 07:15 AM

மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பேரூராட்சியில் வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை உதவி மையத் தில் வழங்கினர்.
புவனகிரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, கெங்கைகொண்டான் பேரூராட்சி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை திரும்ப பெறும் பணி தீவிரமாக நடக்கிறது.
வாக்காளர்கள் பூர்த்தி செய்து வழங்கும் பணியை எளிமைப்படுத்தும் வகையில் நேற்று காலை கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தில் உதவி மையம் செயல்பட்டது.
உதவி மையத்தில் வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்களை எளிதாக பூர்த்தி செய்ய தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கணக்கெடுப்பு படிவங்களில் உள்ள சந்தேகங்களை வாக்காளர்கள் தெரிந்து கொண்டனர்.
மேலும் வாக்காளர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை உதவி மையத்தில் வழங்கினர். தாசில்தார் வெற்றிவேல்,பேரூராட்சி செயல்அலுவலர் மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் சின்னதுரை, வி.ஏ.ஒ., சக்கரவர்த்தி,ஆகியோர் ஆய்வ செய்தனர்.

