/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காத்திருப்போர் கூடம் திறப்பு விழா
/
காத்திருப்போர் கூடம் திறப்பு விழா
ADDED : நவ 17, 2025 12:12 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மதுவானைமேடு கிராமத்தில், புதிய காத்திருப்போர் கூடம் திறப்பு விழா நடந்தது.
புவனகிரி தொகுதி மேம்பாட்டு நிதி, ரூ.6 லட்சம் மதிப்பில் கரும காரியம் செய்வதற்கு, மக்கள் கோரிக்கை ஏற்று புதிய காத்திருப்போர் கட்டடம் கட்டுமானப்பணிகள், 6 மாதத்திற்கு முன்பு துவங்கி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான திறப்பு விழாவிற்கு, புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் தலைமை தாங்கி னார்.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், மாநில துணை செயலாளர் அருளழகன், ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், ஒன்றிய அவைத்தலைவர் செல்ராசு, ஜெயசீலன், குப்புசாமி, ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் ராஜாசாமிநாதன், ஒன்றிய இணை செயலாளர் பிரித்திவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் கார்த்தி அனைவரையும் வரவேற்றார்.
அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., காத்திருப்போர் கூட புதிய கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து துாய்மை காவலர்களுக்கு அரிசி, வேட்டி, சேலையும், பெண்களுக்கு சேலைகளையும் வழங்கினார். இதில், திருநாவுக்கரவு, கோபி, செல்வராசு, மணிகண்டன், மணிவாசகம், ஒன்றிய விவசாய அணி ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

