/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம்
/
நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம்
நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம்
நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம்
ADDED : அக் 27, 2025 11:35 PM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 14
பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வார்டு உறுப்பினர்கள் தலைமையில் கடந்த 27ம் தேதி துவங்கியது. கூட்டம் இன்று(28) மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறவுள்ள சிறப்பு வார்டு கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் அடிப்படை சேவைகளான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை. தெருவிளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்காக்கள் பராமரிப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு, மழைநீர் சேகரிப்பு அமைப்பு, நீர் ஆதாரங்கள் மேம்படுத்துதல் மற்றும் நகராட்சி பள்ளிகள் பராமரிப்பு போன்றவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மேற்படி சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு எடுத்துரைக்கலாம்.
வார்டு பகுதி பொதுமக்களால் தெரிவிக்கப்படும் பிரதான மூன்று கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவே, சம்மந்தப்பட்ட வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கூறப்பட்டுள்ளது.

