/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் தேக்க தொட்டி பணிகள் துவக்கம்
/
குடிநீர் தேக்க தொட்டி பணிகள் துவக்கம்
ADDED : நவ 10, 2025 03:22 AM

நெய்வேலி: வேகாக்கொல்லையில் உயர்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான பணி துவங்கியது
தமிழக அரசின் மாவட்ட கனிம வள நிதி திட்டத்தின் கீழ், கடலுார் மாவட்டம், நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, வேகாக்கொல்லை ஊராட்சியில், ரூ.18 லட்சம் செலவில் உயர்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பணிக ளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பி.டி.ஓ.,க்கள் மீரா கோமதி, பாபு, பொறியாளர் சங்கர், மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய பொருளாளர் ஐயப்பன், சண்முகம், அன்பழகன், சக்திவேல், பன்னீர்செல்வம், தாமோதரன், சரவணன், சக்கரவர்த்தி, அன்பரசன், கார்மேகம், ரவி, சுந்தரமூர்த்தி, பழனி, ஜெயராஜ், கபிலன், மதி, இளையராஜா கலந்து கொண்டனர்.

