ADDED : செப் 02, 2025 10:01 PM
சிதம்பரம்; கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து இன்று பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது
தஞ்சாவூர் மாவட்டம், அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ளது கீழணை.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும்தண்ணீர், அங்கிருந்து முக்கொம்பு வழியாக, கல்லணை வந்தடைகிறது. கல்லணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கீழணையில் தேக்கி வைக்கப்படுகிறது.
இங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி,அங்கிருந்து சென்னை குடிநீருக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதுமட்டுமின்றி, கடலுார், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டவிவசாயநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நடப்பு சம்பா பருவத்திற்கு இன்று 3ம் தேதி கீழணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் ஆகியோர் கீழணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கின்றனர்.
அதனை தொடர்ந்து வீராணம் ஏரியில் இருந்துபாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. நிகழ்ச்சியில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.