/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிவசுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
/
சிவசுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED : செப் 06, 2025 03:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: விலங்கல்பட்டு வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் 3ம் ஆண்டு சம்பஸ்ரா பூஜை மற்றும் திருக்கல்யாணத்தையொட்டி நேற்று முன்தினம் கணபதி ேஹாமம், நவக்கிரஹக ேஹாமம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இரவு வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.