/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., மீட்பு குழுவிற்கு வரவேற்பு
/
என்.எல்.சி., மீட்பு குழுவிற்கு வரவேற்பு
ADDED : ஜன 15, 2024 06:54 AM

நெய்வேலி : தென்மாவட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டு திரும்பிய குழுவினரை, என்.எல்.சி., இயக்குநர்கள் வரவேற்றனர்.
தென் மாவட்டங்களான துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழையால் கடந்த மாதம் 18ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவுறுத்தலின்பேரில், என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி அந்நிறுவன பொறியாளர்கள் குழுவை, மீட்பு பணிக்காக கடந்த மாதம் 22ம் தேதி அனுப்பி வைத்தார்.
என்.எல்.சி., சுரங்கங்களில் இருந்து சுமார் 8 ஆயிரம் ஜி.பி.எம்., திறன் கொண்ட 11 உயர் ஆற்றல் கொண்ட நீர் வெளியேற்றும் பம்புகளுடன், 70 தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், என்.டி.பி.எல்., குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து சுமார் 6 லட்சம் லிட்டர் குடிநீர், துாத்துக்குடியின் 14 பகுதிகளில் நெய்வேலியில் இருந்து அனுப்பப்பட்ட தண்ணீர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட்டது.
மீட்பு பணிகள் முடிந்து நெய்வேலி திரும்பிய என்.எல்.சி., மீட்புக்குழுவினரை அந்நிறுவன இயக்குநர்கள் மோகன் ரெட்டி, சுரேஷ் சந்திரசுமன், சமீர் ஸ்வரூப், செயல் இயக்குநர்கள் ராஜசேகர ரெட்டி, ஜாஸ்பர் ரோஸ், தபசீலன் மற்றும் மூத்த அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.