ADDED : அக் 22, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
கடலுார்: வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து வெல்டர் இறந்தார்.
கடலுார், கோண்டூரைச் சேர்ந்தவர் ஜெயசீலன்,41; வெல்டர். இவர் நேற்று (அக்.,21) தனது வீட்டில் குளியலறையில், குளிக்க சென்றவர் திடீரென வழுக்கி விழுந்தார். இவரின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்ட குடும்பத்தினர், ஜெயசீலனை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ஜெயசீலன் இறந்து விட்டதாக கூறினார்.
கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
