/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நலத்திட்ட உதவி: எம்.எல்.ஏ., வழங்கல்
/
நலத்திட்ட உதவி: எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : டிச 30, 2025 05:23 AM

நெய்வேலி: நெய்வேலி அடுத்த வடக்கு மேலுாரில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 1000த்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்போது, அவர் பேசுகையில், தமிழக அரசு கிராமங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கிராமங்களுக்கு தேவையான சாலை விரிவாக்கப்பணிகள் மட்டுமின்றி புதிய சாலைகளை அமைப்பது, தரமான குடிநீர் வழங்குவது, புதிய ரேஷன் கடைகள் அமைத்தில் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது' என்றார்.
குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் குணசேகரன், அவைத் தலைவர் ராமச்சந்திரன், பொருளாளர் ஆனந்த ஜோதி, துணை செயலாளர் ஏழுமலை, மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், நிர்வாகிகள் கோவிந்தராஜ், இளையபெருமாள், குணசேகர், காண்ட்ராக்டர் கோவிந்தராஜ், அய்யப்பன், ராஜசேகர், துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

