ADDED : டிச 07, 2025 05:48 AM

வேப்பூர்: வேப்பூர் அருகே திட்டப்பணிகளை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கணேசன் வழங்கினார்.
பாசார் கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது.
அதில், 5 ரூபாய் நாணயம் போட்டு, தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் பிடித்துக் கொள்ள முடியும். அதனை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார். பின், பாசார்- உளுந்துார்பேட்டை வரை (தடம் எண் 10டி) மகளிர் கட்டணமில்லா அரசு பஸ்சை, கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மேலும், பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது, மங்களூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், மங்களூர் பி.டி.ஓ., சண்முக சிகாமணி,தி.மு.க., ஒன்றிய செயலர்கள் சின்னசாமி, செங்குட்டுவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வி ராஜரத்தினம், பொறியாளர் சண்முகம்,தி.மு.க., நிர்வாகிகள் ராமதாஸ், சேதுராமன், நிர்மல்குமார், வரதராஜன், பாண்டுரங்கன், ராஜீவ்காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

