/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொடி கம்பங்கள் அகற்றுவது எப்போது?
/
கொடி கம்பங்கள் அகற்றுவது எப்போது?
ADDED : மே 06, 2025 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி, ; புவனகிரி மற்றும் கீரப்பாளையம் பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள கொடி கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளது.
சாலையோரம் மற்றும் பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அரசியல் கட்சியினர் அகற்ற வேண்டுமென, மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதன்பேரில், சில அரசியல் கட்சிகள் தாமாக முன்வந்து கொடி கம்பங்களை அகற்றிக் கொண்டனர். புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஒன்றிய பகுதிகளிலும் புவனகிரி பேரூராட்சி வார்டு பகுதிகளிலும் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளது.
இதுபற்றி போலீசாரும் கண்டு கொள்ளவில்லை. இனியாவது கொடி கம்பங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.