ADDED : பிப் 06, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: வடலுார் அருகே மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
வடலுார் அடுத்த மருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்,26; இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர், கடலுார் தனியார் கல்லுாரியில் எம்.காம்.,படித்து வந்த சிவரஞ்சினி,21; என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்தார்.
இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 31ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற சிவரஞ்சினி, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த விஜய் அளித்த புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.