தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நவீன விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா? மந்தாரக்குப்பம் இளைஞர்கள் எதிர்பார்ப்பு

நவீன விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா? மந்தாரக்குப்பம் இளைஞர்கள் எதிர்பார்ப்பு

நவீன விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா? மந்தாரக்குப்பம் இளைஞர்கள் எதிர்பார்ப்பு


UPDATED : நவ 18, 2026 07:12 PM

ADDED : நவ 18, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 07:12 PM ADDED : நவ 18, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் இப்பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

மந்தாரக்குப்பம் அதை சுற்றியுள்ள ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள் தடகளம், கிரிக்கெட், பூபந்து, டென்னிஸ், வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்து வருகின்றனர்.

இப்பகுதிகளில் சகல வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானங்கள் இல்லாததால் இளைஞர்கள் தகுந்த பயிற்சியை மேற்கொள்ள முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் இப்பகுதியில் விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஊக்குவிக்க நவீன விளையாட்டு மைதானம் அவசியமாக உள்ளது.

இளைஞர்களின் திறமைகளை வீணடிக்காமல் ஊக்கப்படுத்த மந்தாரக்குப்பம் பகுதியில் போதிய நிலத்தைத் தேர்வு செய்து ஓடுதளம் மற்றும் பிற விளையாட்டு உள்கட்டமைப்புகளுடன் கூடிய நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us