/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?
/
விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?
ADDED : நவ 27, 2025 04:48 AM
மந்தாரக்குப்பம்: ஊராட்சிகளில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஏராளமான பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் கிரிக்கெட், தடகளம், பூப்பந்து, டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்டுள்ளனர்.
பலர் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதற்கு போதிய மைதானங்கள் இல்லை. இது குறித்து விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது:
போதிய விளையாட்டு மைதானம் இல்லாததால், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தவறான வழிகளில் சிக்கி தடுமாறும் அபாயம் உள்ளது.
அதனால், இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊராட்சி பகுதிகளில் சகல வசதிகளுடன் விளையாட்டு மைதானம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

