ADDED : ஜூலை 10, 2026 03:09 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் காத்திருப்போர் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மங்கலம்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு, மங்கலம்பேட்டை, கர்னத்தம், மு.அகரம், ரூப நாராயணநல்லுார், கட்டுப்பரூர், எடைச்சித்துார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பட்டா மாற்றம், பத்திர பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தினசரி வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த அலுவலகத்தில் காத்திருப்போர் கூடம் இல்லாததால், பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, மங்கலம்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில், காத்திருப்போர் கூடம் அமைக்க வேண்டும்.
