ADDED : மார் 13, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் மாவட்டம், சிறுபாக்கம் மேற்கு பகுதியில் ஆண்டவர் கோவிலையொட்டி, அரசுக்கு சொந்தமான ஏரி உள்ளது. இங்கு, கடந்த ஒரு மாதமாக கோவிலின் பின்புறம் காலியாக உள்ள இடத்தில் சட்ட விரோதமாக கிராவல் மண் எடுக்கப்படுகிறது. அதுவும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மண் எடுத்து, ஒரு டிப்பர் இரண்டாயிரம் ரூபாய் என விற்கப்படுகிறது.
அளவுக்கு அதிகமாக கிராவல் மண் அள்ளப்படுவதால், கோவிலின் பின்புறம் மெகா சைஸ் பள்ளங்கள் உருவாகியுள்ளன. விடுமுறை நாட்களில் அதிகாரிகள் ஊருக்கு சென்றுவிடுவதால் சட்டவிரோத மண் கொள்ளையை தடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் கனிம வளம் திருடப்படுவதோடு, உருவாகும் பள்ளங்களால் அப்பகுதி மக்களுக்கு ஆபத்தும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, மண் கொள்ளையை தடுக்க வேண்டும்.

