/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாதனை மாணவிக்கு மாவட்ட நிர்வாகம் உதவுமா?
/
சாதனை மாணவிக்கு மாவட்ட நிர்வாகம் உதவுமா?
ADDED : டிச 12, 2024 08:01 AM

கடலுார்; கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த இறையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகள் நிஷா, திட்டக்குடி அரசு கல்லுாரியில் பி.ஏ., இரண்டாமாண்டு படிக்கிறார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கு இடையிலான மண்டல அளவில் நடந்த குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் அகில இந்திய அளவில் நடக்கும் பல்கலைக்கழக போட்டிகளுக்கு தகுதி பெற்றார்.
இவர் ஏற்கனவே 2023ம் ஆண்டு மும்பையில் நடந்த வில்அம்பு எய்தல் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். மாணவியின் பெற்றோர் கூலித்தொழிலாளிகளாக உள்ளதால் போட்டிகளில் பங்கேற்க வறுமை தடையாக உள்ளது.
கல்லுாரி மற்றும் கிராமத்திலுள்ள சமூக ஆர்வலர்கள் சிலர் உதவியுடன் பயிற்சி பெற்றும், போட்டிகளில் பங்கேற்றும் சாதித்து வருகிறார். அகில இந்திய போட்டிக்கு செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

