/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படுமா?
/
என்.எல்.சி., பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படுமா?
என்.எல்.சி., பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படுமா?
என்.எல்.சி., பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படுமா?
ADDED : நவ 28, 2024 06:56 AM

மந்தாரக்குப்பம்,: மந்தாரக்குப்பம் என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி வளாகத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் உள்ளது.
விளையாட்டு மைதானத்தில் பராமரிப்பின்றி செடி, கொடிகள் முளைந்துள்ளால் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறும் இப்பள்ளி மாணவர்கள் சர்வதேச அளவில் சாதனை படைத்து வருகின்றனர்.
எனவே, மாணவர்களுக்கு கபடி, கால்பந்து, ஓட்டபயிற்சி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்கும் மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகளை என்.எல்.சி., நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.