/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணையாற்றின் மையத்தில் உள்ள மணல் திட்டு... அகற்றப்படுமா; விவசாயிகளுக்கு மண் அள்ள அனுமதி அளிக்க கோரிக்கை
/
பெண்ணையாற்றின் மையத்தில் உள்ள மணல் திட்டு... அகற்றப்படுமா; விவசாயிகளுக்கு மண் அள்ள அனுமதி அளிக்க கோரிக்கை
பெண்ணையாற்றின் மையத்தில் உள்ள மணல் திட்டு... அகற்றப்படுமா; விவசாயிகளுக்கு மண் அள்ள அனுமதி அளிக்க கோரிக்கை
பெண்ணையாற்றின் மையத்தில் உள்ள மணல் திட்டு... அகற்றப்படுமா; விவசாயிகளுக்கு மண் அள்ள அனுமதி அளிக்க கோரிக்கை
ADDED : டிச 06, 2024 07:19 AM

கடலுார்: தென்பெண்ணையாற்றின் மையத்தில் உள்ள மணல் திட்டு மற்றும் சீம கருவேல மரங்களால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கிராமங்களில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
வங்க்கடலில் போக்கு காட்டிய பெஞ்சல் புயல் ஒருவழியாக கடந்த 1ம் தேதி புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதனால் புதுச்சேரியில் 50 செ.மீ., கடலுாரில் 23 செ.மீ., மழை கொட்டி வெள்ளக்காடாக்கியது.
அதைத்தொடர்ந்து புயல் கடந்த சென்ற பகுதிகளான திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி பேய் மழை பெய்ததால், சாத்தனுார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
அணைக்கு பெருக்கெடுத்த உபரி நீர் முழுவதுமாக பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டது. துவக்கத்தில் 6000 கன அடி திறந்துவிடப்பட்ட தண்ணீர் படிப்படியாக 1.70 லட்சம் கன அடியாக உயர்ந்தது. ஆற்றுப்பாதையில் தண்ணீர் வரும் இடங்களில் மற்ற இடங்களில் பெய்த மழை நீரும் பெண்ணையாற்றில் சேர்ந்தது. இதனால் முதல்நாள் 2.12 லட்சம் கன அடிநீர் சுபா உப்பலவாடி முகத்துவாரம், வழியாக வங்கக்கடலில் கலந்தது.
இந்த வெள்ள நீர் முழுமையாக வங்கக்கடலுக்கு செல்லாமல் வடக்கு கரையோர கிராமங்களான நாணமேடு, உச்சிமேடு கிராமங்களும், தெற்கு கரையோர கிராமங்களான கண்டக்காடு, தாழங்குடா கிராமங்களில் ஓடிச் சென்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல நுாறு எக்டேர் நிலங்கள் மண் மேடிட்டும், பல நுாறு எக்டேர் நிலங்கள் மெகா பள்ளங்களாக மாறியுள்ளதால், விவசாயம் செய்ய லாயக்கற்ற நிலமாக மாறியுள்ளது.
காரணம், பெண்ணையாற்றின் மையத்தில் உள்ள மணல்திட்டு, சீமகருவேல மரங்கள் ஏக்கர் கணக்கில் வளர்ந்துள்ளன. இந்த மணல் திட்டுக்களால்தான் வெள்ளநீர் ஆற்றின் மையத்தில் ஓடாமல் இரு பிரிவாக பிரிந்து சென்றதில் மண் அரிப்பு ஏற்பட்டு உடைந்து வெள்ளநீர் வெளியேறியது. வரும் காலங்களில் இவ்விரண்டு மணல் திட்டுகளை அகற்றினால் தான் பெண்ணையாற்றின் கரையோர கிராமங்களை காப்பாற்ற முடியும்.
இதுகுறித்து சுபா உப்பலவாடியை சேர்ந்த முன்னாள் துணைத்தலைவர் சுப்ரமணியன் கூறியாவது:பெண்ணையாற்றின் மையப்பகுதியில் உள்ள மணல்திட்டு, சீம கருவேல முள் காடுகளை அகற்றினால்தான் வெள்ள நீர் தடுப்பு இன்றி செல்ல முடியும். எனவே ஆற்றின் மையத்தில் உள்ள மண்ணை, தேவையுள்ள விவசாயிகள் இலவசமாக அள்ளிச் செல்ல அரச அனுமதி வழங்க வேண்டும். அப்போதுதான் ஆறு பள்ளமாகி தண்ணீர் முறையாக ஓடி கடலில் கலக்கும் என்றார்.