/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காத்திருப்போர் கூடம் திறக்கப்படுமா?
/
காத்திருப்போர் கூடம் திறக்கப்படுமா?
ADDED : மார் 06, 2024 02:24 AM

விருத்தாசலம் : தாலுகா அலுவலகத்தில் பூட்டிக் கிடக்கும் காத்திருப்போர் கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டா மாற்றம், சாதி, வருமானம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தினசரி வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி, தாலுகா அலுவலக வளாகத்தில் காத்திருப்போர் கூடம் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த சில வாரங்களாக காத்திருப்போர் கூடம் பூட்டியே கிடப்பதால், பொதுமக்கள் வெளியே நிற்கும் அவலம் உள்ளது.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி, பூட்டிக்கிடக்கும் காத்திருப்போர் கூடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

