ADDED : ஆக 21, 2025 10:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் அருகே கஞ்சா பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மந்தாரக்குப்பம், பெரியாக்குறிச்சியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், மந்தாரக்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் பெரியாக்குறிச்சி புதுநகர் பகுதியில் உள்ள சங்கீதா என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது, 2 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்தது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து, சின்னதுரை மனைவி சங்கீதாவை, 24; கைது செய்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.