நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநத்தம்: ராமநத்தம் அருகே மது பாட்டில்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி பகுதியில் ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர்.
அங்குள்ள ஊராட்சி அலுவலகம் பின்புறம், ஸ்கூட்டியில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் விசாரித்தனர்.
அதில், ராமநத்தம் அடுத்த கொ.குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி கனகவல்லி, 45, என்பதும், திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்றது தெரிந்தது.
ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து, கனகவல்லியை கைது செய்தனர்.