/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேராசிரியர் வீட்டில் நகை திருடிய பெண் கைது
/
பேராசிரியர் வீட்டில் நகை திருடிய பெண் கைது
ADDED : ஜன 19, 2025 06:20 AM
சிதம்பரம்: சிதம்பத்தில் பேராசிரியர் வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் முத்தையா நகரை சேர்ந்தவர் கோபிநாத். அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி துறை பேராசிரியர். இவர், கடந்த 11ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார். மறுநாள் வந்தபோது, வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசில் கோபிநாத் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கோபிநாத் வீட்டில் வேலை செய்து வந்த கொத்தங்குடித்தோப்பு அம்சா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி விஜயலட்சுமி, 50; என்பவர், திருடியது தெரியவந்தது.
அதையடுத்து, விஜயலட்சுமியை போலீசார் கைது செய்து, அவரது வீட்டு அருகே புதைத்து வைத்திருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் திருடுபோன நகைகளை கண்டுபிடித்து கொடுத்த இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமயிலான போலீசாரை டி.எஸ்.பி., லாமேக் பாராட்டினார்.