/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடன் தகராறில் பெண் மீது தாக்குதல்
/
கடன் தகராறில் பெண் மீது தாக்குதல்
ADDED : மே 26, 2025 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த புலியூரைச் சேர்ந்தவர் மலர்கொடி,35; இவர், அதே பகுதியைச் சேர்ந்த தனது சகோதரியின் கணவர் மணிகண்டன், 44; என்பவருக்கு பணம் கடனாக கொடுத்தார். இந்நிலையில், மலர்கொடி பணத்தை திருப்பிக் கேட்டதால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தாக்கினார். இதில், காயமடைந்த மலர்கொடி கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார், மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.