ADDED : அக் 09, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி,: பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது
குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் மகள் பிரியங்கா, 20. இவர் கட்டியங்குப்பம்பகுதியில் உள்ள தனது அக்காவின் கணவர் ரகுராமன், 27, வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார்.
அங்கிருந்து குழு பணம் செலுத்துவதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் மாயமானார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பிரியங்கா மாயமானது குறித்து ரகுராமன் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.