/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாக்கு மூட்டையில் மணல் கடத்திய பெண்கள் கைது
/
சாக்கு மூட்டையில் மணல் கடத்திய பெண்கள் கைது
ADDED : மே 21, 2025 11:31 PM
விருத்தாசலம்: 'தினமலர்' செய்தி எதிரொலியாக, மணிமுக்தாற்றில் சாக்கு மூட்டையில் மணல் கடத்திய இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலத்தில் லாரி, வேன்களில் ஆற்று மணல் மற்றும் கூழாங்கற்கள், நெய்வேலி கரி மண் கடத்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மணிமுக்தாற்றில் இருந்து சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தல் அதிகரித்தது. இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
அதைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், நேற்று அதிகாலை மணிமுக்தாற்றில் இருந்து சாக்கு மூட்டைகளில் மணல் கடத்திய இரு பெண்களை கைது செய்தனர். அவர்கள், தினக்கூலி வேலைக்கு சென்றபோது, அவர்களை மணல் கடத்தலில் ஈடுபடுத்தியது தெரிந்தது.
இது தொடர்பாக, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.