ADDED : ஏப் 23, 2025 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை:
கடலுார் மாவட்டத்தில் 10 சப் இன்ஸ்பெக்டர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
கடலுார் மாவட்டத்தில் மூன்று மாத பயிற்சி முடித்த 10 சப் இன்ஸ்பெக்டர்களுக்கு எஸ்.பி.,ஜெயக்குமார் பணி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, குமராட்சி போலீஸ் ஸ்டேஷனில் பயிற்சி முடித்த செந்தில்குமாருக்கு அங்கேயே பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதேப் போன்று, பரங்கிப்பேட்டை ராம்குமார் புதுச்சத்திரம், சிதம்பரம் மாயகிருஷ்ணன் புவனகிரி, பண்ருட்டி முருகன் நடுவீரப்பட்டு, நெய்வேலி ெதர்மல் திருவேங்கடம் காடாம்புலியூர் என மாவட்டம் முழுதும் 10 பேர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

