/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடும்ப பிரச்னையில் தொழிலாளி தற்கொலை
/
குடும்ப பிரச்னையில் தொழிலாளி தற்கொலை
ADDED : பிப் 19, 2024 06:06 AM
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே குடும்ப பிரச்னையில் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பெண்ணாடம் அடுத்த கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் வீரமணி, 28; கூலி தொழிலாளி. இவரது மனைவி கங்காதேவி, 23. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கூலி வேலையில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப செலவுக்கு கொடுக்காமல், வீரமணி மது குடித்து வந்தார். இதை தட்டிக்கேட்ட கங்காதேவிக்கும், வீரமணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த மாதம் 30ம்தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதில், மனமுடைந்த வீரமணி வீட்டில் துாக்குப் போட்டுக் கொண்டார். கங்காதேவி அருகிலுள்ளவர்கள் உதவியுடன் வீரமணியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

