ADDED : ஆக 06, 2025 08:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர் வேப்பூர் அருகே டைல்ஸ் சரிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி இறந்தார்.
பீகார் மாநிலம், ஜலால்பூரை அடுத்த நத்பிகாவைச் சேர்ந்தவர் காலியா மஞ்சு, 37; கூலித் தொழிலாளி.
இவர், கடந்த 3 நாட்களுக்கு முன், வேப்பூர் அடுத்த தொண்டாங்குறிச்சியில் தனியார் நிறுவன டைல்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார்.
நேற்று மதியம் 1:00 மணிக்கு கம்பெனிக்கு வந்த லாரியில் இருந்து டைல்ஸ் இறக்கி கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக டைல்ஸ் சரிந்து அவர் மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த காலியா மஞ்சு, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.