நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்; வயிற்று வலியால் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லிக்குப்பம் கீழ்பாதி இந்திரா நகரை சேர்ந்தவர் நடராஜன்,50; கூலி தொழிலாளி. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.