பண்ருட்டி: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி அடுத்த தொ ரப்பாடி பேரூராட்சி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 50; கூலி தொழிலாளி; இவரது மனைவி பரிமளா, 44; கிருஷ்ணமூர்த்தி குடிபழக்கம் கொண்ட வர்.
இவர் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம்.
இதனால் தொரப்பாடியில் உள்ள மகள் சிந்துநதி வீட்டில் பரிமளா தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி மாலை 6:15 மணிக்கு அங்கு சென்ற, கிருஷ்ணமூர்த்தி வந்து மனைவி பரிமளாவை அழைத்தார்.
அவர் அப்போது வர மறுத்ததால் கிருஷ்ணமூர்த்தி மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்தார்.
உடனடியாக அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.
பின் மேல்சிகிச்சைக்கு கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை இறந்தார்.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

