/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளர்கள் தர்ணா
/
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளர்கள் தர்ணா
ADDED : ஜூலை 18, 2025 01:24 AM

புவனகிரி: மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் 75 பேர் நேற்று காலை 11:00 மணிக்கு திரண்டனர்.
பின், கீழமூங்கிலடி ஊராட்சியில் மூன்று கிராமங்களுக்கு 2 பணித்தள பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், 2 பணித்தள பொறுப்பாளர்களையும் இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல் பரவுகிறது.
எனவே, 2 பணித்தள பொறுப்பாளர்களையும் இடமாற்றம் செய்யக் கூடாது எனக் கூறி அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
உடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து போராட்டத்தை தொழிலாளரள்கள் கைவிட்டு கோரிக்கை மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.