/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாட்டாளி தொழிற்சங்கம் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
பாட்டாளி தொழிற்சங்கம் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 16, 2025 07:06 AM

கடலுார் : கடலுார் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், பாட்டாளி முன்னேற்ற தொழிற்சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பேரவை தலைவர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர போக்குவரத்து கழக பொதுச் செயலாளர்கள் சிவக்குமார், குப்புசாமி, அரசு விரைவு போக்குவரத்து கழக தலைவர் சேகர் முன்னிலை வகித்தனர்.
மண்டல பொதுச் செயலாளர் ராஜமூர்த்தி வரவேற்றார். பேரவை பொதுச் செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் குப்புராஜன் கண்டன உரையாற்றினர்.
15வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி தொழிலாளர் தினத்தில் புதிய சம்பளத்தை வழங்க வேண்டும்.
அனைத்து போக்குவரத்து ஊழியர்களையும் அரசு ஊழியராக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், அரசு விரைவு போக்குவரத்து கழக பொதுச் செயலாளர் முருகன், பேரவை துணை தலைவர்கள் ஆனைமுத்து, கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.
மண்டல பொருளாளர் குமார் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி ஒருவர் கழுத்தில் துாக்கு போட்டபடி நுாதன முறையில் பங்கேற்றதால் பரபரப்பு நிலவியது.