/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை இன்று துவக்கம்
/
ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை இன்று துவக்கம்
ADDED : ஆக 10, 2025 02:24 AM
கடலுார் : கடலுார் ஆனைக்குப்பம் ராகவேந்திரர் கோவில் ஆராதனை விழா நடக்கிறது.
கடலுார் ஆனைக்குப்பம் மாருதி நகரில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் இன்று பூர்வ ஆராதனை, நாளை 11ம் தேதி மத்ய ஆராதனை, 12ம் தேதி உத்திர ஆராதனைய நடக்கிறது.
இன்று (10ம் தேதி) காலை 10:00 மணிக்கு பரிக்கல் லட்சுமி நரசிம்ம பஜனா மண்டலியனரின் ஹரிபஜனை, மாலை 6:30 மணிக்கு நவநரசிம்ம பஜனா மண்டலி குழுவினரின் ஹரி பஜனை நடக்கிறது.
ஆராதனை விழாவிற்கு தேவையான பச்சரிசி, பருப்பு வகைகள், வெல்லம், நெய், தேன் மற்றும் அபிஷேக திரவியங்கள் வழங்க விரும்பும் பக்தர்கள் கோவிலில் நேரடியாக கொடுக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்பாடுகளை ராகவேந்திரர் சுவாமிகள் பக்த ஜன சேவா டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.