sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டு வசதி வாரிய திட்டங்களில் நிலுவை தொகை 31ம் தேதிக்குள் செலுத்தி பத்திரங்களை பெறலாம்

/

வீட்டு வசதி வாரிய திட்டங்களில் நிலுவை தொகை 31ம் தேதிக்குள் செலுத்தி பத்திரங்களை பெறலாம்

வீட்டு வசதி வாரிய திட்டங்களில் நிலுவை தொகை 31ம் தேதிக்குள் செலுத்தி பத்திரங்களை பெறலாம்

வீட்டு வசதி வாரிய திட்டங்களில் நிலுவை தொகை 31ம் தேதிக்குள் செலுத்தி பத்திரங்களை பெறலாம்


ADDED : செப் 03, 2025 08:50 AM

Google News

ADDED : செப் 03, 2025 08:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டங்களில் முடிவுற்ற குடியிருப்பு திட்டங்களுக்கு வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை 31ம் தேதிக்குள் செலுத்தி விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டங்களில் வீடு, மனை, குடியிருப்பு ஆகிய அலகுகளில் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு முன் தவணைக் காலம் முடிவுற்றது. முடிவடைந்த குடியிருப்பு திட்டங்களுக்கு வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தாமாக முன்வந்து முழுதுமாக ஒரே தவணையில் செலுத்தலாம். அவ்வாறு செலுத்தும் ஒதுக்கீடுதாரர்களுக்கு மாதாந்திர தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி மற்றும் முதலாக்கத்தின் மீதான வட்டியினை முழுதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியினை வருடத்திற்கு ஐந்து மாதம் மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்யப்படும். இந்த அரசாணை (நிலை) எண். 116 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு ஆணை வழங்கியுள்ளது.

அரசு அறிவித்துள்ள இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி வாரிய திட்டங்களில் தவணை முறையின் மூலம் மனை, வீடு, குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்களில் ஏற்கனவே முழு தொகையும் செலுத்தியவர்கள் நீங்கலாக ஏனைய ஒதுக்கீடுதாரர்கள் மட்டும் தாங்கள் ஒதுக்கீடு பெற்ற விழுப்புரம் வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தை அணுகலாம். செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து வரும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஒரே தவணையாக செலுத்தி விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இச்சலுகையானது வரும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், தவணை முறையில் கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒதுக்கீடு பெற்றுள்ள ஒதுக்கீடுதாரர்கள் ஒரே தவணையில் பணம் செலுத்தி கிரயப்பத்திரம் பெற்று பயனடையலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us