தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் குண்டாசில் கைது

இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் குண்டாசில் கைது

இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் குண்டாசில் கைது


ADDED : நவ 18, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 04:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: தகராறை விலக்க முயன்ற இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று போலீசார் தாக்கிய வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் கோமளா, விமலா. பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிக்கும் இவர்களுக்குள் கடந்த 7 ம் தேதி தகராறு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, விமலாவின் உறவினர்களான தமிழ் குச்சிபாளையத்தை சேர்ந்த கார்த்திக் மகன் புகழ்.22; ஹரிஹரன்,26; வைடிபாக்கம் ஜெகதீஷ்,22; உள்ளிட்டோர் கோமளாவிடம் தகராறு செய்தனர்.

அதனை அறிந்த நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வேலுமணி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு அழகுராஜ் ஆகியோர் அங்கு சென்று சண்டையை விலக்க முயன்றனர். அதில், ஆத்திரமடைந்த புகழ் உள்ளிட்டோர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று போலீசாரையும் சட்டையை பிடித்து தாக்கினர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துபுகழ், ஹரிஹரன், ஜெகதீஷ், விமலா மற்றும் அவரது இரு மகன்களை கைது செய்தனர்.

இவர்களில் புகழ் மீது பல வழக்குகள் இருப்பதால் அவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., விவேகானந்தா சுக்லா பரிந்துரையை ஏற்று, புகழை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us