/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது
/
அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது
ADDED : நவ 21, 2025 05:36 AM

நெல்லிக்குப்பம்: கடலுாரில் இருந்து பண்ருட்டிக்கு பாலுார் வழியாக நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு அரசு பஸ் சென்றது.
அதில் டிரைவர் ஆண்டிபாளையம் சக்திவேல் மற்றும் கண்டக்டர் மருங்கூர் கீழக்கொல்லை அரிராமகிருஷ்ணனும்,39; ஆகி யோர் பணியில் இருந்தனர். சுந்தரவாண்டி பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு பஸ் கிளம்பியது. அப்போது ஓடி வந்த, 4 வாலிபர்கள் பஸ்ஸில் ஏறி படிக்கட்டிலேயே உட்கார்ந்தனர்.
இதனால் பயணிகள் ஏற இறங்க முடியாமல் சிரமபட்டனர். இதை பார்த்த கண்டக்டர் அரிராமகிருஷ்ணன் அவர்களை உள்ளே வரும்படி கூறினார். தொடர்ந்து, 'எங்களையே உள்ளே வர சொல்கிறாயா' எனக்கேட்டு, 3 பேர் அரிராமகிருஷ்ணனை பிடித்து கொள்ள முத்துநாராயணபுரத்தை சேர்ந்த காமராஜ் மகன் நவீன்,19; என்பவர் அவரை தாக்கினார்.
காயமடைந்த அரிராமகிருஷ்ணன் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து நவீனை கைது செய்தனர். 3 பேரை தேடி வருகின்றனர்.

