ADDED : டிச 25, 2024 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; புவனகிரி அருகே முதியவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி அருகே பூ.மணவெளியை சேர்ந்தவர் சுப்ரமணியன், 66; இவர், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள பாலத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சீத்தாராமன் மகன் சிலம்பரசன், 28; என்பவர், போதையில் பாட்டில்களை உடைத்து, முதியவரிடம் தகராறு செய்து தாக்கினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து சிலம்பரசனை கைது செய்தனர்.