ADDED : ஆக 07, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம், ஆலடி அடுத்த கொக்காம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது தாயார் விருத்தாம்பாள் கடந்த 15 நாட்களுக்கு முன் இறந்தார்.
இதனால், நேற்று முன்தினம் அரவது வீட்டில் கருமகாரியம் நடந்தது.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த காசிநாதன் மகன் விஸ்வநாதன், 34; என்பவர், குடிபோதையில் ஆனந்தன் வீட்டின் எதிரில் நின்று பொதுமக்களை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, விஸ்வநாதனை கைது செய்தனர்.