/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., சுரங்கத்தில் பெண்ணை தள்ளி கொலை செய்த வாலிபர் கைது
/
என்.எல்.சி., சுரங்கத்தில் பெண்ணை தள்ளி கொலை செய்த வாலிபர் கைது
என்.எல்.சி., சுரங்கத்தில் பெண்ணை தள்ளி கொலை செய்த வாலிபர் கைது
என்.எல்.சி., சுரங்கத்தில் பெண்ணை தள்ளி கொலை செய்த வாலிபர் கைது
ADDED : ஏப் 10, 2025 01:49 AM

மந்தாரக்குப்பம் : பெண்ணை தாக்கி என்.எல்.சி., சுரங்கத்தில் தள்ளி விட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், மந்தாரக்குப்பம் அடுத்த வேப்பங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பிரபாவதி, 33; இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கணவர் பாஸ்கரன் உயிரிழந்தார்.
கடந்த 7 ம் தேதி வீட்டில் இருந்து பிரபாவதி வெளியே சென்றவரை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்காததால், மந்தாரக்குப்பம் போலீசில் பிரபாவதியின் தாயார் தனலட்சுமி நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து அவரது குடும்பத்தினர் மற்றும் வேறு சில நபர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சந்தேகத்தின் பெயரில் வடக்குவெள்ளுர் ஆறுமுகம் நகரை சேர்ந்த சம்பத்,33; ,அழைத்து சென்று போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
அதில், பிரபாவதியும், சம்பத்தும் பள்ளியில் படிக்கும் போது நண்பர்களாக இருந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக நெருங்கி பழகி வந்துள்ளனர். கடந்த 7 ம் தேதி இரவு கடைவீதிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஆத்திரமடைந்த சம்பத் குடிபோதையில் பிரபாவதியை கடுமையாக தாக்கியதில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். பின்னர் அவரை என்.எல்.சி., முதல் சுரங்கத்தில் 100 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு சம்பத் சென்றுள்ளது தெரியவந்தது.
அதை தொடர்ந்து நேற்று காலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, பிரபாவதி பலத்த காயங்களுடன் என்.எல்.சி., சுரங்கத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு எஸ்.பி. ஜெயக்குமார் விசாரணை நடத்தினர். கைரேகை பிரிவு டி.எஸ்.பி. ஸ்ரீதர், தடவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பிரபாவதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக மந்தாரக்குப்பம் போலீசார் சம்பத்தை கைது செய்தனர்.