ADDED : ஏப் 15, 2025 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : பத்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பெண்ணாடம் வாலிபர் போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி, அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் வீட்டிலிருந்து மாயமானார். அவரது தந்தை புகாரின் பேரில், சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், பெண்ணாடம் அடுத்த பெ.பூவனுாரை சேர்ந்த செந்தில்குமார் மகன் செல்வகுமார் (எ) செல்வம், 23; என்பவர், மாணவியை கடத்திச் சென்று, ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்தது தெரிந்தது.
புகாரின்பேரில், விருத்தாசலம் மகளிர் போலீசார், செல்வம் மீது போக்சோ மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.