/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உறவினரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
/
உறவினரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
ADDED : ஆக 21, 2025 10:04 PM
விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே மாமனை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி அடுத்த வேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி, 50; இவரது மனைவி மணிமேகலையின் அண்ணன் சிவப்பிரகாசம். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, மூர்த்தி வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சிவப்பிரகாசம் மகன் தனுஷ், 21; மூர்த்தி வீட்டிற்கு வந்து, தனது குடும்ப பிரச்னைக்கு காரணம் நீங்கள்தான் என கூறி மணிமேகலை, மூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த தனுஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மூர்த்தியை குத்தி, கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார், தனுைஷ கைது செய்தனர்.