/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டவர் மீது ஏறி வாலிபர் மிரட்டல் பெண்ணாடம் அருகே பரபரப்பு
/
டவர் மீது ஏறி வாலிபர் மிரட்டல் பெண்ணாடம் அருகே பரபரப்பு
டவர் மீது ஏறி வாலிபர் மிரட்டல் பெண்ணாடம் அருகே பரபரப்பு
டவர் மீது ஏறி வாலிபர் மிரட்டல் பெண்ணாடம் அருகே பரபரப்பு
ADDED : அக் 30, 2025 06:58 AM
பெண்ணாடம்: மொபைல் போன் டவர் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்ணாடம் அடுத்த வடகரை காலனியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன், 45; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் மனை விற்றது தொடர்பாக பிரச்னை இருந்தது. இதுதொடர்பாக வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பரமேஸ்வரன் நேற்று இரவு 7:30 மணியளவில் அதே பகுதியில் உள்ள 70 அடி உயர தனியார் மொபைல் போன் டவர் மீது ஏறி நின்று கொண்டு, பிரச்னையை தீர்த்து வைக்கக்கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தார். உறவினர்கள் சமாதானம் பேசியதைத்தொடர்ந்து இரவு 8:00 மணியளவில் கீழே இறங்கினார்.
பிரச்னை காரணமாக திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பெண்ணாடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்