தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வேலைக்கு சென்ற வாலிபர் மர்ம சாவு

வேலைக்கு சென்ற வாலிபர் மர்ம சாவு

வேலைக்கு சென்ற வாலிபர் மர்ம சாவு


UPDATED : அக் 13, 2026 05:10 AM

ADDED : அக் 13, 2026 01:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 05:10 AM ADDED : அக் 13, 2026 01:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம்: பெண்ணாடம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் மகன் மனோஜ்குமார்,18; ஐ.டி.ஐ., படித்து விட்டு வீட்டில் இருந்தார். கடந்த 9ம் தேதி வெளியூருக்கு வேலைக்கு செல்வதாகக்கூறி வீட்டைவிட்டு வெளியே சென்றார்.

இந்நிலையில், நேற்று பகல் 1:00 மணியளவில் பெண்ணாடம் ரயில் நிலையம் அருகே மயங்கி கிடப்பதாக இவரது நண்பர் பெ.பொன்னேரி, திடீர்குப்பம் ரகுநாதன் மகன் பிரசாந்த், 18, என்பவர் மனோஜ்குமார் தாய் நிஷாந்திக்கு தகவல் தெரிவித் தனர்.

தொடர்ந்து, பிரசாந்த் இவரது நண்பர் விஜயபிரசாத் உதவியுடன் மனோஜ்குமாரை பைக்கில் அமர வைத்து வீட்டிற்கு கொண்டு வந்தனர். மயங்கி கிடந்த மனோஜ்குமாரை பெண்ணாடம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தகவலறிந்து வந்த பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் மனோஜ்குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மனோஜ்குமார் தாய் நிஷாந்தி கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us