நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையில் வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம் அப்பர் தெருவை சேர்ந்தவர் குமார் மகன் ராஜேஷ், 30; இவரது மனைவி சத்தியா, 26. இருவரும் ஆறு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஏழு மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழும் நிலையில், விருத்தாசலம் நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு நடக்கிறது.
இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த ராஜேஷ் மின்விசிறியில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.